வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ 10,000 – கேரள அரசு
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் விவரங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்படி முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். கேரள அரசின் இணையதளத்தின் மூலம், விண்ணப்பித்து அதில் சேத விவரங்களை இணைக்கும்படி அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே வெள்ளதால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வங்கிகணக்கிலும் தலா ரூ.10,000 செலுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 10,000 ரூபாவை அறிவித்தது, 14 மாவட்டங்களில் இருந்து 3,91,494 குடும்பங்கள் பயனடைவார்கள்.
மறுசீரமைப்பு பணிகள் பற்றிய புதுப்பிப்புகள்: 1,31,683 வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன, இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் 31 சதவீதமாகும். இதில் 23.36 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் மீட்டமைக்கப்பட்டுள்ளது. 25.6 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,314 டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டு (16158 பாதிக்கப்பட்டு உள்ளது) இப்போது செயல்பட்டு வருகின்றன.