டெல்லியில் அதிகாலை கனமழை: பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல்
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. டெல்லி அருகே உள்ள குர்கானில் பலத்த மழை பெய்தது. அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனத்த மழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில், தண்ணீர் தேங்கியுள்ளதால், கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மோசமான வானிலை காரணமாக குர்கானில் உள்ள சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி விமான நிலையத்தை சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று காலையும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நொய்டா, காசியாபாத் ஆகிய இடங்களில் இன்று காலை மிதமான மழை பெய்தது