Breaking News
முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சந்திப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் மதுசூதனன். கட்சியின் அவைத்தலைவராகவும், மூத்த தலைவராகவும் இருந்துவருகிறார். இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு, கட்சியில் மதுசூதனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுவந்தது. இதன் ஒருபகுதியாக, சமீபத்தில் நடந்த ராயபுரம் கூட்டுறவு சங்கத் தேர்தலில், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இதற்கு, அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்களே காரணம் என்று கூறப்பட்டது.

இதன்காரணமாக, இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், நேற்று இது தொடர்பாக அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை மதுசூதனன் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார். கூட்டுறவு சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மதுசூதனன் அதிருப்தியில் உள்ளதாக நேற்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்த நிலையில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை இன்று காலை மதுசூதனன் சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல் அமைச்சர் பழனிசாமி இல்லத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.