தகவல் கேட்டவரிடம் ஜி.எஸ்.டி., வசூலித்த அதிகாரி
மத்திய பிரதேசத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய அலுவலகம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. ‘இதற்கு எவ்வளவுதொகை செலவிடப்பட்டது’ என்ற விபரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அஜய் துாபே என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.
ம.பி., வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரியம் 18 பக்க விபரங்களை கொடுத்தது. இந்த விபரங்களை பிரதி எடுத்த வகையில், ஒரு பக்கத்துக்கு இரண்டு ரூபாய் என்ற விதத்தில் 36 ரூபாய் கட்டணமும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யாக ஏழு ரூபாய் சேர்த்து மொத்தம் 43 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இது குறித்து அருண் துபே கூறியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவது அரசு அதிகாரியின் கடமை. இதற்கு ஜி.எஸ்.டி., வசூல் செய்வது சட்டப்படி குற்றம், என்றார்.