எகிப்தில் கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை
எகிப்தில் 2013-ம் ஆண்டில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
எகிப்து நாட்டில் 2013-ம் ஆண்டில் முஹம்மது மோர்சி அதிபர் பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்டார். அவரது ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் எனக்கோரி அவரது கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் தலைநகர் கெய்ரோவில் போராட்டம் நடத்தினர். இதில் ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 600 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 739 பேர் மீதான வழக்கு விசாரணையில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலர் துாக்கிலிடப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்த 75 பேருக்கு மரண தண்டனை விதித்து கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.