தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 202 எஸ்ஐக்கள் (விரல் ரேகை) பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டப்படிப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள், மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சப்-இன்ஸ்பெக்டர் (விரல் ரேகை). வயது: 01.07.2018 அன்று 20ல் இருந்து 28க்குள். (அதாவது 1.7.1990 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவோ, 1.7.1998 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும்) இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் பட்டம்.
உடற்தகுதி: பொது மற்றும் பிற்பட்டோர் – ஆண்கள் – உயரம்- 163 செ.மீ., ஆதிதிராவிடர், பழங்குடியினர்- 160 செ.மீ., பெண்கள் (பொது மற்றும் பிற்பட்டோர்)- 154 செ.மீ., ஆதிதிராவிடர், பழங்குடியினர்-152 செ.மீ.,
சம்பளம்: ₹36,900-₹1,16,600.
தேர்வுக் கட்டணம்: ₹500/-. பொதுப்பிரிவு மற்றும் துறைத்தேர்வு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ₹1000த்தை செலான் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
எழுத்துத்தேர்வு, உடற்கூறு அளத்தல், நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.09.2018.