ஆரோக்கியத்தில் அக்கறை; பிரதமர் மோடிக்கு பாராட்டு
‘நாட்டு மக்களின் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்திய, முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி’ என, பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ என்ற மருத்துவ பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து, லான்செட் இதழின் தலைமை ஆசிரியர், ரிச்சர்ட் ஹார்டன் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலின் வெற்றியை, மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தான் நிர்ணயிக்க போகிறது.
இந்த நேரத்தில், பிரதமர் மோடியின், ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன் அடையப் போகின்றன; இது, மோடி அரசுக்கு நற்பெயரை பெற்றுத் தரும்.
இதற்கு நிகரான திட்டத்தை, காங்., தலைவர் ராகுல் சிந்திக்க வேண்டும். சரியான நேரத்தில், நாட்டு மக்களின் சுகாதாரம் குறித்து அக்கறை காட்டும் திட்டத்தை, மோடி அறிவித்துள்ளார். மக்களின் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்திய, முதல் இந்திய பிரதமர், நரேந்திர மோடி தான். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.