கலவர வழக்கு: பீம் ஆர்மி தலைவர் விடுதலை
உ.பி.யில் ஜாதி கலவர வழக்கில் கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், என்ற ரேவனை விடுதலை செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டது.
உ.பி. மாநிலம் ஷாஹாகரன்பூர் மாவட்டத்தில் ஷாபிபூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரத்தில் முடிந்தது.இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.கலவரத்திற்கு காரணமானவர்கள் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத்,இவரது உதவியாளர்கள் சோனு,ஷிவ்குமார் ஆகியோர்மீது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து. சிறையில் அடைத்தனர்..
இந்த வழக்கில் கடந்த ஒரு ஆண்டாக சிறையில் இருந்த சந்திரசேகர ஆசாத்தை உபி.மாநில அரசு முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட்டதையடுத்து நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருடைய உதவியாளர்கள் சோனு, ஷிவ்குமார் அக்டோர் முதல் வாரம் விடுதலையாக உள்ளனர்.