மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும். எனவே மீனவர்கள் மத்திய வங்கக்கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதிக்கு நாளையும், நாளை மறுநாளும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 1–ந்தேதி முதல் தற்போது வரை தென்மேற்கு பருவமழை 229 மி.மீ. பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட 13 சதவீதம் குறைவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.