பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படும் ஆசிய நாடுகள்: 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை
உலக அமைதி மற்றும் நாடுகளின் ஸ்திரதன்மைக்கு மிகப்பெரும் சவாலாக பயங்கரவாதம் திகழ்கிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் பெருமளவு தொகையை செலவழித்து வருகிறது. இருப்பினும் அவற்றை கட்டுப்படுத்துவது அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரும் சவலாகவே உள்ளது. பயங்கரவாததிற்கு சில நாடுகள் மறைமுகமாக ஆதரவு அளிப்பதும் அவற்றை கட்டுப்படுத்துவதை சாத்தியம் இல்லாததாக்கி வருகிறது.
இந்த சூழலில், பயங்கரவாதம் பற்றி அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வகையில் உள்ளது. அதாவது, உலக அளவில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் மட்டும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து ஆசிய நாடுகளில் மட்டும் 2017-ல் 59 சதவீதம் தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு பாயங்கரவாத தாக்குதல்கள் 23 சதவீதம் குறைந்து உள்ளது தெரியவந்துள்ளது. அதேவேளையில், பயங்கரவாதத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 27 சதவீதம் அதிகரித்துள்ளன. 2017-ல் 100 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது இதில், 70 சதவீத உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தான், ஈராக், நைஜீரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளில் மட்டும் நடைபெற்றதாக பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.