திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவள்ளூர் ஆயில் மில் அருகே பூங்கொத்து கொடுத்து அமைச்சர் பெஞ்சமின் மாவட்டச் செயலாளர் பலராமன் வழி அனுப்பினர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற அதற்காக திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் பொன்னி தலைமையில் திருவள்ளூர் முதல் திருத்தணி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இதற்கிடையில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் முதலமைச்சரை வரவேற்பதற்காக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் திருவள்ளூர்மேற்கு மாவட்ட செயலாளர் பலராமன் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர் பின்னர் அவ்வழியே சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காரிலிருந்து இறங்கினார் அதனை அடுத்து அவருக்கு மலர்ச்செண்டு பூக்கள் தூவி வரவேற்கப்பட்டது பொதுமக்கள் பெண்கள் என குவிந்து காணப்படவே காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் பொதுமக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணங்கி நடந்து சென்றார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போலீசார் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் கூட்ட நெரிசலை போலீஸார் சீரமைத்தனர் பின்னர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார் நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருப்பதி கோவிலுக்கு சென்று நேற்று திரும்பியவர் இன்று தமிழக முதல்வர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது