பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ.80 ஆக வசூலிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.80 வசூலிக்கப்படுகிறது. இத னால், பொதுமக்கள் அவதிப் படுகின்றனர். சிலர் காத்திருந்து மாநகர பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக் கப்பட்டது. இந்த புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இதை காரணம் காட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதற்கிடையே, வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்தபட்ச கட்டணம் ரூ.80 என வசூலிக்க தொடங்கிவிட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக சிஐடியு நிர்வாகி மனோகரன் கூறும்போது, ‘‘2013-ம் ஆண்டில் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.65 தற்போது ரூ.86.13 என உயர்ந்துள்ளது. இதுதவிர, உதிரி பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வேறொறு தொழிலுக்கு மாறிச் செல்கின்றனர். எனவே, ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது. இதில், சில முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கவுள்ளோம். குறிப்பாக, ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தவுள்ளோம்.’’ என்றார்.
இது தொடர்பாக ஆட்டோ பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘தமிழக அரசு ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தபோது, போக்குவரத்து துறை, போலீஸ் கெடுபிடி அதிகம் இருந்ததால், மீட்டர்கள் போட்டு நிர்ணயிக் கப்பட்ட ஆட்டோ கட்டணத்தை வசூலித்தனர்.
ஆனால், இப்போது ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில்கூட, முறையாக மீட்டர் போட்டு கட்டணம் வசூலிப் பதில்லை. பேரம் பேசித்தான் கட்டணத்தை கேட்கின்றனர். கேட்டால், பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டுகின் றனர். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.80 கேட்கிறார்கள். எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.