Breaking News
மனைவி விற்பனைக்கு ஒரு விசித்திரமான விளம்பரம்

வியட்நாமில் தனியார் நிறுவனம் ஒன்று, மனைவி விற்பனைக்கு என்கிற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஒரு சிலர் போட்டி போட்டு மனைவியை வாடகைக்கு பெற முன் பதிவு செய்து வருகிறார்களாம்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், ‘வியட்நாமில் மனைவி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் விலை 6000 டாலர்கள் மட்டுமே என குறிப்பிட்டு ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன நிபந்தனை…

மனைவியை வாங்குபவர் கவனத்திற்கு என கூறி விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்…

* நீங்கள் மனைவியாக தேர்வு செய்யும், பெண்கள் கற்புக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

* தேர்வு செய்யும் பெண்கள், 90 நாட்களுக்குள் உங்கள் வீட்டுக்கு வந்து சேர்வார்.

* டெலிவரி சார்ஜ் எதுவும் வசூலிக்கப்படாது.

* நீங்கள் தேர்வு செய்த பெண் ஒரு வருடத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டால், கற்புடன் உள்ள மற்றொரு பெண் இலவசமாக அனுப்பிவைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..!

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.