அம்மன் சிலைகள் உள்ளிட்ட பழமைவாய்ந்த 17 கற்சிலைளை ஆரம்பாக்கம் போலீசார் மீட்டு விசாரணை
தமிழக ஆந்திர எல்லை பகுதியான எளாவூர் ஏழு கண் பாலத்தின் கீழ் தண்ணீரில் தூக்கி வீசப்பட்டு கேட்பாரற்று கிடந்த அம்மன் சிலைகள் உள்ளிட்ட பழமைவாய்ந்த 17 கற்சிலைளை ஆரம்பாக்கம் போலீசார் மீட்டு விசாரணை .. எளாவூரில் புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன சோதனை சாவடியில் போலீசாரின் கெடுபிடிகளுக்கு பயந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற கடத்தல் பேர்வழிகள் முடியாமல் பாலத்தின் கீழ் போட்டு சென்றதால் பரபரப்பு.
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் ஏராளமான சிலைகளை சிலைககடத்தல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வந்த நிலையில் இன்று கும்முடிப்பூண்டியருகே உள்ள எளாவூர் ஏழுகண் பாலத்தின் அடியில் தண்ணீரில் தூக்கி வீசப்பட்ட நிலையில் 17பழங்கால கற்சிலைகள் கிடந்ததை ஆரம்பாக்கம் போலீசார் கைப்பற்றினர் .
தமிழக ஆந்திர எல்லை பகுதியான எளாவூர் ஏழு கண் பாலத்தின் கீழ் தண்ணீரில் தூக்கி வீசப்பட்டு கேட்பாரற்று கிடந்த அம்மன் சிலைகள் நாகம் கருடன் உள்ளிட்ட பழமைவாய்ந்த 17 கற்சிலைளைஅப்குதிவாசிகள் அளித்த தகவலின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் சென்று மீட்டு விசாரணை நடத்தி பின்னர் அதனை கும்முடிப்பூண்டி வட்டாட்சியர் மதன் குப்புராஜ் வசம்ஒப்படைத்தனர். எளாவூரில் புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன சோதனை சாவடியில் போலீசாரின் கெடுபிடிகளுக்கு பயந்து ஆந்திராவிற்குஇதனை கடத்த முயன்ற கடத்தல் பேர்வழிகள் பாதுகாப்பை மீறி கடத்தி எடுத்து செல்ல முடியாமல் பாலத்தின் கீழ் போட்டு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர் .
எளாவூர் ஏழு கண் பாலத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடத்தில் பீடத்துடன் 7அம்மன் சிலைகள் உள்ளிட்ட 17சிலைகள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .