Breaking News
சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு, எம்ஜிஆர் பொன்மொழி தொகுப்பை வெளியிட்டு விழா பேருரை ஆற்றுகிறார்.

இதனிடையே விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏராளமான வாகனங்களில் சென்னை நோக்கி வருவதால் அச்சிறுப்பாக்கம் முதல் மதுராந்தகம் வரையிலான திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி 17,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.