திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி வெட்டிக் கொலை செய்யப்ட்ட வழக்கில் 8,பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்பேடு கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் – தங்கராஜ் நடைபயிற்சிமேற்கொண்ட போது வெட்டி கொலை செய்யப்பட்டார் இது தொடர்பான வழக்கு திருவள்ளுர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தங்கராஜின் தம்பியும் செங்கள் சூளை உரிமையாளரான வெங்கட்ராமன் ஆஜராகி முக்கிய சாட்சியம் அளித்து வந்தார். இந்நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று காலை மேல் மணம்பேடு கிராமத்தில் மனைவி மற்றும் மகளுடன் வெங்கட்ராமன் பேசிக் கொண்டிருந்த போது இரு மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன். வெங்கட்ராமனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாயினர். இதனால் கிராமமே போர்களபோல மாறி வீடுகளுக்கு தீ வைத்து கலவர பூமியாகி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கபட்டனர் .இது குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளவேடு காவல்துறையினர் திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மப்பேடு அடுத்த பண்ணூர் பகுதியில் கொலையாளிகள் மறைந்திருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராஜேஷ்,(32), தினேஷ்,(24), இளங்கோவன்,(24), வேலா,(24), கவிகுமார்,(24), ஸ்டீபன்ராஜ்,(24), இளமுருகன்(19), விக்ரம்,(28), உள்ளிட்ட 8, பேரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் / 30.09.18.