டிரம்ப் உடன் சுந்தர் பிச்சை சந்திப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பை, கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை சந்தித்தார்.கூகுளில் தன்னைப்பற்றி ஒருதலைப்பட்சமாக செய்திகள் வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதைதொடர்ந்து கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, அதிபர் டிரம்பை சந்தித்து விளக்கம் அளித்தார்.வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் லாரி குட்லாவ் கூறியதாவது, அதிபர் டிரம்பை, கூகுள் தலைமை நிவாகி சுந்தர் பிச்சை சந்தித்தார். அப்போது டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து போதுமான விளக்கத்தை அவர் கூறியதாக, குட்லாவ் தெரிவித்துள்ளார்.