ஏழு குற்றங்கள் தொடர்பாக விரைவில் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி அறிமுகம்: மத்திய உள்துறை அதிகாரி தகவல்
ஏழு குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் ஆன்லைனில் புகார் அளித்து எப்ஐஆர் பதியச் செய்யும் வசதி நாடு முழுவதிலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது, “திறன்வாய்ந்த போலீஸ் விசாரணைக்கு பக்கபலமாக இருக்கவும் பொது மக்களுக்கு சேவையாற்றிடவும் ஸ்மார்ட் காவல்துறை என்ற கருத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார். இதன்படி குடிமக்களை மையப்படுத்திய இணையதளங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.
தொடக்கத்தில் ஏழு குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் ஆன்லைனில் புகார் அளித்து எப்ஐஆர் பதியச் செய்யும் வசதி இதில் அளிக்கப்பட உள்ளது.
பணியில் அமர்த்தப்பட உள்ள நபர் மற்றும் அவரது முகவரியை சரிபார்க்கும் வசதி, பொது நிகழ்ச்சி களுக்கு அனுமதி பெறுவது, வாகனத் திருட்டு புகார்கள், காணா மல்போன மற்றும் கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் குறித்து தகவல் அளிக்கும் வசதி இதில் அளிக் கப்பட உள்ளது. வீட்டுப் பணி யாளர், டிரைவர், நர்ஸ் உள்ளிட் டோரை வீட்டில் பணியில் சேர்க்கும் முன்பும், வாடகைக்கு குடியேறு வோரை குடியமர்த்தும் முன்பும் அவர்கள் குற்றப் பின்னணி உள்ள வர்களா என இந்த இணையதங் களில் சரிபார்க்க முடியும்” என்றார்.
கடந்த 2014-ல் அனைத்து மாநில காவல்துறை இயக்குநர் களின் வருடாந்திர மாநாடு குவாஹாட்டியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி ஸ்மார்ட் காவல்துறை குறித்து பேசினார். நாட்டில் சட்டம் ஒழுங்கு பணியை காவல்துறை திறம்பட கையாள வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார் அவர்.