Breaking News
பம்மல் – தாம்பரம் – பல்லாவரம் குண்டும் குழியுமான நகராட்சி சாலை பணிகளுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு ? !

சென்னை நகரை ஒட்டியுள்ளது தாம்பரம், பல்லாவரம், பம்மல், திருவேற்காடு, பூந்தமல்லி, அனக்காபுத்தூர், ஆவடி நகராட்சி இப்பகுதியில் உள்ள சாலைகள் சமீப காலமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று குண்டும் முழியுமாக காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களும் சமூக சேவை அமைப்புகளும் மற்றும் அனைத்து கட்சியினரும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பிரகாஷ் அவர்களின் அதிரடி உத்தரவினால் நகர்புற வளர்ச்சி நிதி உதவி திட்டத்தின் கீழ் (டூரிப்) தரமான சாலைகள் அமைத்திட திருவேற்காடு நகராட்சிக்கு ரூ.6 கோடி ஆவடி நகராட்சிக்கு ரூ.20 கோடி பம்மல் நகராட்சிக்கு ரூ.5 கோடி அனகாபுத்தூர் நகராட்சிக்கு ரூ.6 கோடி பல்லாவரம் ரூ.20 கோடி தாம்பரம் நகராட்சிக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்திட ஆணை பிறப்பித்தார். இப்பணிகளை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் டாக்டர்.இளங்கோவன், மண்டல பொறியாளர் முருகேசன், திருவேற்காடு கமிஷனர் சித்ரா, பூந்தமல்லி கமிஷனர் டிட்டோ, ஆவடி கமிஷனர் ஜோதிகுமார், பம்மல் கமிஷனர் விஜயகுமாரி, தாம்பரம் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு!
காஞ்சிபுரம் மாவட்டம் ர்தாம்பரத்திற்கு அருகாமையில் உள்ளது மாடம்பாக்கம் பேரூராட்சி இப்பேரூராட்சியில் உள்ள அனைத்து நகர்பகுதிகளும் மழையினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பேரூராட்சி இயக்குனர் பழனிச்சாமி உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னைய்யா நேரடி மேற்பார்வையில், காஞ்சிபுரம் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் மழைநீர் வடிக்கால்வாய் அமைக்கும் பணி வேக வேகமாக நடந்துவருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.