Breaking News
குஜராத்தில் 20 ஆயிரம் வடமாநிலத்தவர்கள் வெளியேறினர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக முதல்வர் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.
அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ்சிங் குஷ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஒருவர் செய்த தவறுக்கு குஜராத்தை அல்லாத அனைவரையும் குற்றவாளிகளாக கருதி தாக்குதல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்துருந்தார்.

எனினும், இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.

குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா திங்கள்கிழமை கூறும் போது உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து குடியேறிய தொழிலாளர்கள் ‘பயப்பட வேண்டாம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறினார்.

இதற்கிடையே, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 48 மணிநேரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.

நிலைமை குஜராத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பராமரிக்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் முதல்வர் விஜய் ருபானி குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வோம் என கூறி உள்ளார்.

ஏதாவது பிரச்சனைகளால் பாதிக்கப்படும் வெளிமாநிலத்தவர்கள் போலீசில் புகார் அளித்தால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என ராஜ்கோட் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உத்தரபிரதேச முதல்வர் கூறும் போது,

கடந்த 3 நாட்களில் அத்தகைய சம்பவம் நடந்ததில்லை என்று குஜராத் முதல்வர் என்னிடம் கூறினார். குஜராத்தின் வளர்ச்சியில் பொறாமைப்படும் சிலர் இத்தகைய வதந்திகளை பரப்புகின்றனர். குஜராத் அரசால் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.