மொஹாலி டெஸ்ட்: இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் முதல் நாளில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்த இங்கிலாந்து இன்று 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இன்று காலை அடில் ரஷித், காரெத் பாத்தி ஆகியோர் விக்கெட்டுகளை மொகமது ஷமி கைப்பற்றினார், இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளது. பார்த்திவ் படேல் 13 ரன்களுடனும் முரளி விஜய் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மொகாலியில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஸ்டூவர்ட் பிராடு, பென் டக்கெட், ஜாபர் அன்சாரி ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், ஜாஸ் பட்லர், கிரேத் பாத்தி ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்திய அணியில் விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக பார்த்தீவ் படேல் இடம் பெற்றார். தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் கருண் நாயர் அறிமுக வீரராக களமிறங்கினார்.
இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து நிதானமாக விளை யாடியது. தொடக்க வீரர்களான ஹசிப் ஹமீது 9 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும், கேப்டன் அலாஸ்டர் குக் 27 ரன்களில் அஸ்வின் பந்திலும் ஆட்டமிழந் தனர். அடுத்து வந்த ஜோ ரூட் 15 ரன்னில் ஜெயந்த் யாதவ் பந்திலும், மொயின் அலி 16 ரன்களில் முகமது ஷமி பந்திலும் வெளியேறினர்.
மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து 29 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஜானி பேர்ஸ்டோவ் 20, பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஸ்டோக்ஸ் 59 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.
அப்போது ஸ்கோர் 144 ஆக இருந்தது. 6-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவுடன் இணைந்த ஜாஸ் பட்லர் நிதானமாக விளை யாடினார். பேர்ஸ்டோவ் 76 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 13-வது அரை சதத்தை கடந்தார். தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 62 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.
2-வது செஷனில் மட்டும் அந்த அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து 113 ரன்கள் சேர்த்தது. பொறுமை யாக விளையாடிய ஜாஸ் பட்லர் 80 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு அவர், பேர்ஸ்டோவுடன் இணைந்து 69 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் நிதானமாக விளையாடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேர்ஸ்டோவ் 89 ரன்களில் ஜெயந்த் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அவர் 177 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். கிறிஸ் வோக்ஸ் 70 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் போல்டானார். . இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 2 விகெட் களும் அஸ்வின் 1 விக்கெட்டையும் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல்நாள் துளிகள்:
அலாஸ்டர் குக் 3 ரன்களில் இருந்த போது சிலிப்பில் கொடுத்த கேட்ச்சை ஜடேஜாவும், 23 ரன்களில் கொடுத்த கேட்ச்சை அஸ்வினும் தவறவிட்டனர். எனினும் குக் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறினார். அவர் 6 பவுண்டரி களுடன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மொயின் அலி ஷாட்பிட்ச் பந்தில் திணறுவதை கணித்த கேப்டன் விராட் கோலி சரியாக திட்டமிட்டு முகமது ஷமி மூலம் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் வீசிய ஷாட்பிட்ச் பந்தை பைன்லெக் திசையில் மொயின் அலி தூக்கி அடிக்க அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த முரளி விஜய் கச்சிதமாக கேட்ச் செய்தார்.