23,000 சதுர அடியில் மதர் தெரேசா வடிவத்தில் நின்று இந்திய வேல்டு ரெக்கார்டு சாதனையை செய்தனர்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சுமார் 3000 பேர்,23,000 சதுர அடியில் மதர் தெரேசா வடிவத்தில் நின்று இந்திய வேல்டு ரெக்கார்டு சாதனையை செய்தனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் 3,000 மாணவிகள் ஒன்று திரண்டு மதர் தெரேசா வடிவில் நின்று இந்தியா வேல்டு ரெக்கார்டு சாதனையை செய்ய முயன்றனர். இதில் இந்தியா வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் செந்தில் அரசு கலந்துகொண்டு பார்வையிட்டார். மாணவிகளின் இந்த முயற்ச்சி இந்தியா வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றது, இதற்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வனிதாராணி அவர்களிடம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் இந்தியன் வேல்ட் ரெக்கார்டு நிறுவனத்தின் அதிகாரி கோபாலகிருஷ்ணன் மற்றும் அகில இந்திய மனித உரிமை சட்ட பாதுகாப்பு கழகத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை ஆசிரியர் வனிதாராணி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு எங்கள் பள்ளியில் பயிலும் சுமார் 3000 மாணவிகளின் ஒட்டுமொத்த முயற்ச்சி மற்றும் அவர்களுடைய அர்பணிப்பால் மாத்மிரமே இந்த இந்திய வேல்ட ரெக்கார்டை எங்களால் செய்ய முடிந்த்து என தெரிவித்தார்.