அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனாவும் தலையிட்டது – டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு
2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே, கடந்த மாதம் டிரம்ப் சீனா மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதாவது, தான் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதை சீனா விரும்பவில்லை என்றும், அதனால் இந்த ஆண்டுக்குள்(2018) அமெரிக்காவில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு சீனா முயற்சித்து வருவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டினார். இதை உடனடியாக சீனா மறுத்தது.