சாய்பாபா 100வது சமாதி தினம்: ஷீரடி சென்றார் மோடி
சாய்பாபாவின் 100 வது சமாதி தினத்தை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று (அக்.,19) ஷீரடி சென்றார்.
1918 ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று சாய்பாபா சமாதி நிலையை அடைந்தார். இதன் 100 வது ஆண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று, பிரதமர் மோடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தினார். சாய்பாபா டிரஸ்ட் சார்பில் ரூ.475 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தின் பயனடைந்த பயணாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளையும் வழங்க உள்ளார். தொடர்ந்து அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார்.
சாய் தர்ஷன் கட்டிடம் 18,000 க்கும் அதிகமான பக்தர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாய்பாபா டிரஸ்ட் சார்பில் சாய் பாபாவின் மகா சமாதி தின நூற்றாண்டு விழா 2017 ம் ஆண்டு அக்.,1 முதல் 2018 ம் ஆண்டு அக்., 18 வரை கொண்டாடப்பட்டது.