சட்டையை மாற்றிய ‘சி 3’
‘சி 3’ படக் குழுவினர் எந்த நேரத்தில் ‘மக்களோடு மக்களாக கை கோர்த்து நிற்கும் காவல் துறையினருக்கு தலை வணங்குகிறோம்’ என தங்களது பட விளம்பரத்தை வெளியிட்டார்களோ அன்றே நிலைமை மாறிப் போனது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போராடிய இளைஞர்களும், காவல் துறையினரும் அது வரை நண்பனாக இருந்தார்கள். அவர்கள் விளம்பரத்தை வெளியிட்ட நேரம் அனைத்தும் தலைகீழ் ஆகிப் போனது.காவல் துறையைப் பெருமைப்படுத்தும் படமாகத்தான் ‘சிங்கம், சிங்கம் 2’ ஆகிய படங்கள் இருந்தன. மூன்றாம் பாகமான ‘சி 3’ படமும் அப்படித்தான் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் தங்களது படத்தை காவல் துறையின் பெருமைக்குரிய படம் என்பதைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதில் ‘சி 3’ குழுவினர் சற்றே விலகியுள்ளார்களோ என்று சந்தேகிக்க வைக்கிறது. காவல் துறை பற்றிய விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் பட வெளியீட்டை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்கள்.பிப்ரவரி 9ம் தேதி ‘சி 3’ வெளியாகிறது என அவர்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் சூர்யா காவல் துறையினரின் சீருடை அணியாமல் இருக்கும் புகைப்படம்தான் வெளியாகியுள்ளது. ஒரு விளம்பரத்தில் ‘கோட்’ போட்ட புகைப்படமும் மற்றொரு விளம்பரத்தில் ‘காக்கி’ கலர் சட்டை அணிந்த புகைப்படத்தையும் சேர்த்து கொஞ்சம் குழப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கால ரசிகர்கள் மிகவும் தெளிவானர்கள். எதற்கும் ‘அஞ்சான்’ இப்படி சட்டை விஷயத்தில் சறுக்குகிறாரே…?, கொண்ட கொள்கையில் துணிச்சலுடன் தொடர்வதுதானே அழகு. நாளைக்கு மாறி விடுவார்கள் என்ற ஆவலுடன் இருப்போம்.
நன்றி : தினமலர்