இன்று இந்தியா- பாகிஸ்தான் ராணுவ இயக்குனர் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை
இந்தியாவும் பாகிஸ்தான் ராணுவ இயக்குனர் ஜெனரல்களிடையேயான பேச்சு வார்த்தை இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் அண்மையில் தனது படைவீரர்களைக் கொலப்பட்டதன் மீதான கடுமையான எதிர்ப்பை இந்தியா தாக்கல் செய்யும். மேலும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே தாக்குதல் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்தும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்படும்.
இந்திய இராணுவம் பாக்கிஸ்தானிய இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கும் என தெற்கு பிளாக்பாதுகாப்பு அமைச்சக அதிகாரி தெரிவித்து உள்ளார். இரு தரப்பினரின் உயர்மட்ட அதிகாரிகளும் 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
Indian Army and Pakistan Army to hold DGMO (Director General of Military Operations) level talks today; Indian Army to raise issues of infiltration bids, actions of Border Action Team (BAT),& use of Pakistan&Pakistan Occupied Kashmir territory for propagating terrorist activities
— ANI (@ANI) October 23, 2018
அக்டோபர் 21 ம் தேதி பூஞ்ச் சந்திப்பில் இரு படைகளின் துறைத் தளபதிகளும் சந்தித்தனர். இந்தியவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு எதிராக பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.