தூத்துக்குடி பள்ளியில் மாணவர்களுக்குள் மோதல் : ஆசிரியர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன்  தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி பள்ளியில் மாணவர்களுக்குள் மோதல் : ஆசிரியர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரனி மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வராணி என்பவரின் மகன் புதியவன் (14) இன்னாசியார் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கியுள்ளனர். இதில் ஒரு மாணவருக்கு மூக்கில் ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மாணவன் புதியவனிடம் அவரது பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர் கூறியுள்ளார். பெற்றோரை அழைத்து வருவதற்காக நேற்று மாலை வீட்டிற்குச் சென்ற மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் பிரேம் ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (2 )