Breaking News
கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னையில் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் காலமானார். கூத்துப்பட்டறை என்பது மேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளி. நாடக ஆசிரியர் ந. முத்துச்சாமியால் 1997 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் தமிழ்த் திரைப்படத்துறையிலும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் விஜய் சேதுபதி, பசுபதி, விமல், குரு சோமசுந்தரம்,கலைராணி, இளங்கோ குமரவேல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தை சேர்ந்த ந.முத்துசாமி பத்மஸ்ரீ விருதை பெற்றவர் ஆவார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.