இந்துத்வா போக்கை கடைபிடிக்கும் காங்கிரஸ்: மத்திய பிரதேசத்தில் மகாகாளேஸ்வரர் கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்
மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மத்திய பிரதேசத்தில் ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, உஜ்ஜைனுக்கு வந்த ராகுல்காந்தி இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான மஹாகாளேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அவருடன் கமல்நாத், ஜோதிராத்தியா சிந்தியா ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர்.
குஜராத் சட்டசபை தேர்தல் முதல் மென்மையான இந்துத்வா போக்கை காங்கிரஸ் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் ராகுல் தன்னை சிவ பக்தராக முன்னிறுத்தி வருகிறார்.
கைலாஷ் மானசேராவர் யாத்திரை, மத்திய பிரதேசத்தில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான மஹாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். தற்போது நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலை ஒட்டியும் ராகுல்காந்தி கோயில் கோயிலாக சென்று வருகிறார்.