Breaking News
சர்தார் வல்லபாய் சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி: சிலை திறப்பு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடு

’இரும்பு மனிதர்’ என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே, 597 அடியில் (பீடம் உள்பட சிலையின் மொத்த அடி 787) பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான இந்த சிலையை, பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) திறந்து வைக்கிறார்.

அப்போது விமானப்படை விமானங்களின் சாகசம், ஹெலிகாப்டரில் இருந்து சிலை மீது பூமழை பொழியச் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரின் இசை நிகழ்ச்சியுடன், ஒடிசா, பஞ்சாப், குஜராத் மாநிலங்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அதற்காக ஏற்கனவே ஒத்திகையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு மூலம் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.

குஜராத்தில் நாளை சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.