Breaking News
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை சட்டத்தில் மரண தண்டனை விதிக்கபட்ட பெண் விடுதலை

பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்டசண்டை ஒன்றில் அசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், தான் அவ்வாறாக அவமானப்படுத்தவில்லை என்று கூறிவந்தார். எட்டு ஆண்டுகள் தனிமை சிறையிலும் அடைக்கப்பட்டார்.

தெய்வ நிந்தனை சட்டங்கள் வலுவாக உள்ள பாகிஸ்தானில் இவரது வழக்கு பலத்த சச்சரவையும் பிரிவினையையும் ஏற்படுத்தியது.

இந்த வழக்கு மேல் முறையீட்டுற்கு வந்ததை தொடர்ந்து, கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தில் இஸ்லாமாபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தீவிர மதசார்பாளர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாகிப் நிசார் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசியா பீபியை விடுதலை செய்தனர். உடனடியாக அசியாவை விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

நான்கு குழந்தைகளுக்கு தாயான ஆசியா 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அண்டை வீட்டாருடன் சண்டை போடு உள்ளார். இந்த் சண்டை சாதாரணமான ஒரு விஷயத்திற்காகதான் தொடங்கியது. அவர்கள் லாகூர் அருகே பழம் பறித்துக் கொண்டிருந்த போது, ஒரு பக்கெட் தண்ணீருக்காக தொடங்கியது.

தாங்கள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஆசியா அருந்திவிட்டார். இதனால், எங்கள் நம்பிக்கையின்படி அந்த தண்ணீரின் புனிதம் கெட்டுவிட்டது. இனி அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாது என்று கூறி சண்டையிட்டு உள்ளனர். ஆசியா மதம் மாற வேண்டும் என்று அவர்கள் வாதிட்டதாகவும், அதற்கு மறுப்பாக முகமது நபியை ஆசியா இறை நிந்தனை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. சச்சரவிட்டதை ஒப்புக் கொண்ட ஆசியா தொடக்கத்திலிருந்தே இறை நிந்தனை குற்றத்தை மறுத்து வந்தார். அவரது வழக்கறிஞர் அரசு தரப்பில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கூறி வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், ஆசியாவை ஆதரித்தவர் பஞ்சாப் மாகாண ஆளுநரான சல்மான். ஆசியாவை மன்னிக்க வேண்டும், தெய்வ நிந்தனை சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கோரி வந்தார். இதன்காரணமாக. 2011 ஆம் ஆண்டு, அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.