Breaking News
சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி மக்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

அவர்களின் தலைநகராக ராக்கா நகரம் விளங்கியது.

அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கு கடும்போர் நடந்தது. இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் அந்த நகரத்தில் ராட்சத சவ குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் அமெரிக்க கூட்டுப்படையின் வான்தாக்குதலில் பலியானவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வான்தாக்குதல்கள் காரணமாக ராக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டு விட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.