வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடு 2016 -ல் 36 சதவீதம் உயர்வு
2017- 18 மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட்டாகும்.இது ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டாகும்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* நாட்டின் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது
* அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது
* அரசின் முயற்சிகளூக்கு நாட்டு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
* உலக பொருளாதாரம் இருண்டிருக்கும் சூழலில் இந்தியா பிரகாசிக்கிறது.
* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடு 2016 -ல் 36 சதவீதம் உயர்வு
* இளைஞர் நலன், வேலை வாய்ப்புக்கு இந்தியா அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது.
* உலகின் 6-வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது.
* உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது.