Breaking News
நாடு முழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்படும்: உள்துறை அமைச்சகம்

மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்தகுமார் (வயது 59) இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அனந்தகுமார் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அனந்த குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். மத்திய இரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அனந்தகுமார் மறைவைத்தொடர்ந்து கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் அனந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.