திவாலான ஆவடி நகராட்சி ரூ 81 கோடி நஷ்டம்
திவாலான ஆவடி நகராட்சி ரூ 81 கோடி நஷ்டம்
பொது நிதியிலிருந்து எந்த வேலையும் செய்யக்கூடாது
சென்னைக்கு அருகாமையில் வளர்ந்துவிட்ட மிகப்பெரிய நகராட்சிகளில் ஆவடி நகராட்சியும் ஒன்று ஆண்டுக்கு பல நூறு கோடி வருவாய் ஈட்டி தரும் நகராட்சி. அமைச்சர் வேலுமணி நிர்வாக ஆணையர் கோ பிரகாஷ் ஆகியாேது சீரிய முயற்சியினால் அபரித வளர்ச்சி பெற்று வருகிறது இந்நிலையில் நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறுகையில் ஆவடி நகராட்சி ரூ81 கோடி நஷ்டத்தில் உள்ளது பணிகளை முடித்த கான்ட்ராக்டர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது ஊழியர்களுக்கு மாத சம்பளம் காலதாமதமாக கொடுக்கப்பட்டு வருகிறது நகராட்சி அதிகாரி பொது நிதியிலிருந்து எந்த பணிகளையும் செய்ய கூடாது என உத்தரவிட்டுள்ளார் நகராட்சியில் சுகாதார அதிகாரி மொய்தீன் என்பவர் பணியில் அலட்சியம் காட்டியதாக ஆணையர் ஜோதிகுமார் கண்டிப்பு காட்டியதால் மொய்தீன் லீவ் போட்டுவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது இந்த நகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய நளினி என்பவர் தான் தோன்றித்தனமாக செயல்பட்டதால் தாம்பரம் நகராட்சிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார் நகராட்சி ஆணையர் ஜோதிகுமார் பணியில் நேர்மை காட்டி வருவதாகவும் பொது மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது