திருவள்ளூரில் கூட்டுறவு வார விழா ஆர்வத்துடன் ரத்ததானம்
திருவள்ளூரில் கூட்டுறவு சங்கம் சார்பாக மாநில கூட்டுறவு வார விழா கோலாகலமாக நடந்தது விழாவிற்கு கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார் விழாவில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்தத்தை தானமாக அளித்தனர் இதில் இரண்டு டாக்டர்கள் செவிலியர்கள் பங்கேற்று ரத்தத்தை சேகரித்தனர் ரத்தத்தை வழங்கிய பணியாளர்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் ஆப்பிள் பழங்கள் பழச்சாறுகள் வழங்கப்பட்டன விழாவில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தமிழ்ச்செல்வி அவர்கள் பேசுகையில் கூட்டுறவு தான் நாட்டிற்கு நல்ல உறவை வழிவகுக்கும் நாம் கொடுக்கும் ரத்தம் பல பேர் உயிரை காக்கும் ரத்த தானத்தை பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் நடத்தும் இந்த விழா தமிழகத்திற்கு ஏன் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ வேண்டும் நாம் பேசுவதைக் காட்டிலும் செயலிலும் நிரூபிக்க வேண்டும் நாம் ஒரு உயிரை காப்பாற்றினோம் என்ற பெருமையை உலகிற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்று விழாவில் பேசினார் மேலும் இவ்விழாவில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் திருவள்ளூர் பொன்னேரி பாலாஜி திருத்தணி ரமேஷ் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் வேல்முருகன் மற்றும் தனி அலுவலர் சரோஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்