கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் – வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது.
கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை – வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.