Breaking News
நடராஜன் ‘அப்பல்லோ’ ஆஸ்பத்திரியில் அனுமதி

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற குழு தலைவருமான சசிகலாவின் கணவர் ம.நடராஜன்.

இவருக்கு நேற்று மாலை திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடல் சோர்வு மற்றும் அசதி காரணமாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் எக்ஸ்ரே, ஸ்கேன், இ.சி.ஜி. எடுத்து பரிசோதித்து ஆரம்பகட்ட சிகிச்சை அளித்தனர்.ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அவரை டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இதன் பேரில் அங்குள்ள எல்.பிளாக்கில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டாக்டர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் சில தினங்கள் தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுவார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.