சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடி விபத்து: 22 பேர் பலி
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெபே மாகாணத்தில் உள்ள ஜான்ஜியகோ என்ற இடத்தில் இரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
இதன் அருகே தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பகுதியில், இரசாயனத்துடன் நின்று கொண்டிருந்த லாரி, திடீரென வெடித்தது.
இதன் காரணமாக வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் 38 லாரிகள், 12 கார்கள் தீக்கிரையாகின. வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளில் சீனாவில் நடைபெறும் மிகப்பெரிய தொழிற்சாலை வெடி விபத்து இதுவாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு, முறையாக சேமித்து வைக்கப்படாத இரசாயனக்கலவை வெடித்து சிதறியதில், 173 பேர் காயம் அடைந்தனர்.