வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட் -11 செயற்கைகோள்
இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 என்ற செயற்கை கோளை ‘இஸ்ரோ’ வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து ‘ஏரைன் – 5’ என்ற ராக்கெட் மூலம் ‘ஜி சாட்-11’ செயற்கைகோள் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கை கோள் அனுப்பப்படுகிறது. 5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது.