பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம்
2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மும்முறை என்னை முதல்வராக்கியவர் ஜெயலலிதா. எனது குல தெய்வம் ஜெயலலிதா.
* தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை 2019-20 ஆம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல்
* செலவீனங்கள் 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு
* வரும் நிதியாண்டில் தமிழக கடன் அளவு 3.97 லட்சம் கோடியாக இருக்கும்.
* 2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும்.
* வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும்.
* தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
* மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு