இன்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே மாணவர்கள் உயர்நிலை படிப்புகளுக்கு தயாராக ஏதுவாக பொதுத்தேர்வை நடப்பாண்டு முதல் முன்கூட்டியே நடத்தி முடிக்க முடிவானது. அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 12 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். தொழிற்கல்வி பாடங்களுக்கு மட்டும் இப்போது தேர்வுகள் நடந்து வருகின்றன. முக்கிய பாடங்களுக்கு மார்ச் 2-ம் தேதி தேர்வுகள் தொடங்க உள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது. முதல்கட்டமாக விருப்பப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. முக்கிய பாடங்களுக்கு மார்ச் 7-ல் தேர்வுகள் தொடங்கும். இந்த தேர் வில் 21 ஆயிரத்து 400 பள்ளிகளைச் சேர்ந்த 22 திருநங்கையர்கள் உட்பட 18 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு நாடு முழுவதும் 4,974 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு அறைக்கு காலை 10 மணிக்குள் வரா விட்டால் தேர்வு எழுத முடியாது. ஹால்டிக்கெட் மற்றும் பள்ளி அடையாள அட்டை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். மேலும், பேனா மற்றும் அடிப்படை உப கரணங்களை மட்டுமே தேர்வு அறைக்கு கொண்டு செல்ல மாண வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சிபிஎஸ்இ தெரிவித் துள்ளது.