அரசுத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த மின்னாளுமை முகமை-ஐஐஎம் இடையே ஒப்பந்தம்
தமிழக அரசுத் துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, திருச்சி ஐஐஎம் இடையே முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசு நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பங்களான தொகுப்புத் தொடர், இணையம் சார்ந்த பொருட்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு மின்னாளுமை முகமை, திருச்சி இந்தியமேலாண்மை நிறுவனம் இடையே முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
உயர் அலுவலர்களுக்கு பயிற்சி இதன் மூலம், அரசுத்துறை உயர் அலுவர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி மற்றும் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படும். மேலும், மின்னணு மயமாக் கப்பட்ட கிரா மப்புற திட்டங்கள் போன்ற முயற்சிகள் மூலம் கிராமம் மற்றும் நகர்புறங்களுக்கு இடையேயான மின் இலக்க இடைவெளியை சமன் செய்தல், அரசு மற்றும் அரசு சாரா முகமைகளில் சமூகப் பொறுப்பு ஆய்வு மேற்கொண்டு அதன் விளைவுகளைக் கண்டறி தல் ஆகியவற்றுக்கு வழிவகை ஏற்படும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்னாளுமை முகமை ஆணையர் சந் தோஷ் கே. மிஸ்ரா, திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் சார்பில் பீமராயா மெட்ரியும் கையெழுத்திட்டனர்.
அரசுத்துறைகள் மற்றும் மின் ஆளுமையில் ஆராய்ச்சி மேற்கொள்ள உதவி மற்றும் ஒத்துழைப்பு அளிக்கவும், தமிழக அரசின் கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற துறைகளில் திறன் மேம்பாடு ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு பகிர்தலுக்கான கருத்தரங்குகள் நடத்துவது போன்ற பணிகளுக்காக தமிழ்நாடு மின்னாளுமை முகமை மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜினா டெக் உயர் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான இந்திய மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
வேலைவாய்ப்பை உருவாக்க இதற்கான ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மின்னாளுமை முகமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா மற்றும் அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த எம்.கே. பத்மநாபன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மேலும், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேம்படுத்தவும், நிதி தொழில்நுட்பம், திறன்மிகு தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாடு மின்னா ளுமை முகமை மற்றும் பொன்டேக்–யுகே இந்தியா இனோவேஷன் நிதி நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ந்து வரும் தொழில்நுட் பங்களுக்கான சிறப்பு மையத்தை அமைக்க பொன்டேக் நிறுவனம் நிதி வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் சந்தோஷ்கே.மிஸ்ராவும், பொன்டேக்நிறுவனத்தின் மகேஷ் ராமச்சந் திரனும் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.