இந்தியா அமைதியான அணு ஆயுத நாடு: மன்மோகன் சிங்
இந்தியா தயக்கமுள்ள, அமைதியான அணுஆயுத நாடு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் முன்னாள் தூதர் ராகேஷ் சூத் எழுதிய “Nuclear Order in the Twenty First Century” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், விரிவான மற்றும் மேம்பட்ட அமைதியான அணுஆயுது திட்டங்களை கொண்ட ஒரே நாடு இந்தியா தான். தொழில்நுட்ப திறன் நிரூபிக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் கால் நூற்றாண்டுகளாக நாமும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு தான் இருந்தோம். இதன் காரணமாகவே நம்பகமான, குறைந்தபட்ச தடுப்பு அணுசக்தி கோட்பாடு உருவாக்கப்பட்டது.
கடந்த 70 ஆண்டுகளாக அணுஆயுத அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதிப்புகள் ஆகியன நிச்சயமற்ற நிலையை அதிகரிக்கச் செய்துள்ளது. 1945 க்கு முன் அணுஆயுத தாக்குதல் என்பதையே உலகம் கண்டதில்லை.
அதிகரித்து வரும் அணுஆயுத வளர்ச்சி காரணமாக உலகின் பல தலைவர்கள் கவலை கொண்டுள்ளதுடன், எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தயங்கிக் கொண்டுள்ளனர். அணுஆயுதத்தை குறைக்க வேண்டும் என பேசினாலும் பல நாடுகள் அணுஆயத வளர்ச்சியை நவீனமமாக்கி வருகின்றன. இந்தியா தயக்கம் கொண்ட அணுஆயுத நாடு. திட்டமிட்டாத அணுஆயுத விரிவாக்கம் ஆபத்திற்கு வழிவகுக்கும் என்றார்.