Breaking News
வடகொரிய தலைவர்கள் ரயிலில் மட்டும் செல்லும் ரகசியம் என்ன?

4வட கொரிய தலைவர்கள் விமானத்தில் வெளிநாடு செல்லாமல் ரயிலில் செல்லுகின்ற ரகசியம் என்ன தெரியுமா?
இந்த வழக்கத்தை கிம் ஜாங்-உன்னின் தாத்தா கிம் இல்-சுங் தொடங்கி வைத்தார். கிம் இல்-சுங் தனது சொந்த ரயிலில் வியட்நாமுக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றார்.

விமானத்தில் செல்வதற்கு அவருக்கு இருந்த அச்சமே இதற்கு காரணமாகும். இந்த ரயில்கள் ஆடம்பர, தோலாலான சோபாக்களை கொண்டதும், கூட்டம் நடத்துவதற்கான அறைகளை கொண்டதுமாக இருந்தன.

இன்று, கிம் ஜாங்-உன்-க்கு சொந்தமான ரயிலில் 21 குண்டு துளைக்காத பெட்டிகள் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட சோபாக்களும் இதிலுள்ளன.

பாதுகாப்பு ரயில் ஒன்று முன்னால் செல்ல, இன்னொன்று பின்னால் வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.