ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவோம்: முதல்வர் ஓபிஎஸ் உறுதி
ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் எங்களின் இந்த அறப்போராட்டம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று திடீரென சந் தித்து தனது ஆதரவை தெரிவித் தார். அவரை வரவேற்று நன்றி தெரிவித்த ஓபிஎஸ், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவை எம்ஜிஆர் தொடங் கிய காலத்தில், தனது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை எல்லாம் மீறி, கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் மதுசூதனன். அவர் தற்போது எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவில் இருந்து சசி கலாவை ஜெயலலிதா நீக்கினார். அதன்பிறகு ஜெயலலிதாவுக்கு சசிகலா மன்னிப்புக் கடிதம் எழுதினார். தனக்கு கட்சிப் பதவியோ அல்லது ஆட்சிப் பதவியோ பெறும் ஆசை எதுவும் இல்லை என்றும், ஜெயலலிதாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் என்றும் அந்தக் கடிதத்தில் சசிகலா கூறியிருந்தார். அதே சசிகலாதான் இப்போது கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் முன்னிறுத்தப்படு கிறார். கட்சியையும், ஆட்சி யையும் கைப்பற்றி ஒரு குடும் பத்தின் சொத்தாக மாற்றுவதற் காக சசி கலா கபட நாடகம் ஆடுகிறார்.
மக்களுக்காக உண்மையாக உழைத்து, ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களை எல்லாம் நடைமுறைக்கு கொண்டுவந்து, அதிமுக அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பான மக்களின் எண்ணங்களை, உணர்வுகளை நடைமுறைப்படுத்தும் அறப் போராட்டத்தில்தான் தற்போது நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதற் காக அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடுவோம். எங்கள் மீது இனியும் அபாண்டமாக ஏதே னும் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருந்தால், அதற்கு தகுந்த பதிலடி தர தயாராக உள்ளோம்.
ஜெயலலிதாவின் வீடு என்பது அவர் குடியிருந்த கோயில். அவர் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் அங்கு பொக்கிஷம் போல் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். அவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண் டும். ஆகவே, அந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் எங்களின் இந்த அறப்போராட்டம்.
அனைவரும் ஒன்றுபட்டு..
பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்கள் மனச்சாட்சிப்படி அணி அணியாக வந்து எங்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக் கிறார்கள். அவர்கள் அனைவருக் கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் இயக்கத்துக்கு நிரந்தர அவைத் தலைவர் மதுசூதனன்தான். மூத்த தலை வராகிய அவர் எங்களை எல்லாம் வழிநடத்த வேண்டும். அனைவரும் கைகோர்த்து செயல்பட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.
நன்றி : தி இந்து தமிழ்