வட, மத்திய மாவட்டங்களில் வெப்பம் உயரும்
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:
காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவ தால் தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. திருச்சி, திருத்தணியில் தலா 104, வேலூர், மதுரையில் தலா 103, தருமபுரி, சேலம், திருநெல்வேலியில் தலா 102, நாமக்கல்லில் 101, கோவையில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட் கள் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் காற்று நிலத்தை நோக்கி வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் திருவள் ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக் கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக் கக் கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.