இலங்கையில் ஓரிரு நாளில் அமைதி திரும்பும்: இலங்கை ராணுவ அமைச்சர்
இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையன்று 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நேற்றுமுன்தினம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது குண்டுவெடித்தது.
மேலும், கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த சம்பவங்களால் நாடு முழுவதும் பீதி நிலவி வருகிறது. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி 359 பேர் பலியாகியுள்ளனர்.
இலங்கையை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை ராணுவ அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டினரின் 17 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உடல்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் உயிரிழந்த 359 பேரில் 39 பேர் வெளிநாட்டினர். இலங்கையில் இன்னும் ஓரிருநாளில் அமைதி திரும்பும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.