மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுமா? – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டை மத்திய ஆசிரியர் தகுதி தேர்விலும் (சிடெட்) வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையொட்டி அந்த தேர்வு எழுத விரும்பும் 6 பேர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக்கொண்ட விடுமுறை கால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது இந்த வழக்குகள் தொடர்பாக மத்திய அரசும், மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ.யும், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலும் ஜூலை 1-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யத்தக்கதாக நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.