கேரட் அல்வா
என்னென்ன தேவை?
துருவிய கேரட் – 2 கப்
காய்ச்சிய பால் – முக்கால் கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – 50 கிராம்
முந்திரி, பாதம் – தேவையான அளவு
ஏலக்காய் – 8
கேசரி கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றிச் சூடானதும் துருவிய கேரட்டைப் போட்டு பச்சைவாடை போகும்வரை வதக்குங்கள். பிறகு பாலை ஊற்றி, கேரட்டை வேகவையுங்கள். பொடித்து வைத்துள்ள ஏலக்காயை அதில் தூவி, அதற்கு மேல் ஒன்றரைக் கப் சர்க்கரையைப் போட்டு கைவிடாமல் கிளறுங்கள். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பின் சுவை தூக்கலாகத் தெரியும். பால் சுண்டுகிற தருணத்தில் அடுப்பை குறைத்துவையுங்கள். கேரட் கெட்டியான பதத்துக்கு மாறும்போது சிறிதளவு நெய் சேர்த்து அடுப்பை அனைத்துவிடுங்கள். மீதியுள்ள நெய்யில் முந்திரி, பாதாம் இரண்டையும் வறுத்துச் சேர்த்தால் மணக்க மணக்க கேரட் அல்வா தயார். கேரட்டின் நிறமே அல்வாவுக்குப் போதும். விரும்பினால் கேசரி பவுடரைச் சேர்க்கலாம்.